டாபர் இந்தியா காய்கறி சாறு அறிமுகப்படுத்துகிறது!

Webdunia

திங்கள், 15 அக்டோபர் 2007 (17:24 IST)
தேன், பழச்சாறு போன்றவற்றை விற்பனை செய்யும் டாபர் இந்தியா நிறுவனம் காய்கறி சாறு அறிமுகப் படுத்தப் போகிறது.

ஏற்கனவே டாபர் இந்தியா நிறுவனம் ரியல் ஆக்டிவ் என்ற பெயரில் பல்வேறு பழச்சாறுகளையும், பழம் காய்கறி இரண்டும் கலந்த சாறு, பழம் சோயா கலந்த சாறு ஆகியவைகளை விற்பனை செய்து வருகிறது.

தற்போது முதல் முறையாக காய்கறி சாறு, காரட் சாறு ஆகிய இரண்டையும் அறிமுகப்படுத்தப் போகிறது.

இது பற்றி டாபர் இந்தியா நிறுவனத்தின் (உணவு பிரிவு) வர்த்தக தலைவர் சஞ்சய் சர்மா கூறியதாவது,

கடந்த இரண்டு வருடங்களாக புதுமையான முறையில் பழச்சாறு விற்பனை செய்து வருகின்றோம். இதனால் பழச்சாறு விற்பனை அதிகரித்து வருகின்றது. ஆக்டிவ் என்ற பெயரில் விற்பனை செய்யும் பழச்சாறு உடல் நலத்தில் அக்கறை கொள்பவர்களுக்காக தயாரிக்கப்படுகின்றது. இதை குடிப்பதால் உடலில் உள்ள சர்க்கரை அளவு அதிகரிக்காது. இதில் வைட்டமின், மினரல் சத்து அதிகளவு உள்ளன என்று கூறினார்.

டாபர் இந்தியா பலவித பழச்சாறுகளை நீண்ட நாட்கள் கெட்டுப் போகாமலும், அதன் இயற்கை தன்மை மாறாத வகையில் டெட்ரா பேக் எனப்படும் அட்டை பெட்டிகளில் அடைத்து விற்பனை செய்து வருகிறது. அத்துடன் இந்தியாவில் விற்பனையாகும் தேனில் 52 விழுக்காடு டாபர் இந்தியா நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்