இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலை முதலே பங்குகள் விற்பனை தொடர்ந்து விறுவிறுப்பாக நடைபெற்ற வந்த நிலையில், மும்பை பங்குச் சந்தைக் குறியீடு சற்றுமுன் 19,000 புள்ளிகளைத் தாண்டி புதிய சாதனை படைத்துள்ளது!
மதியம் 2 மணியளவில் 18,940 புள்ளிகளை எட்டியது மும்பை பங்குச் சந்தைக் குறியீடு. இது கடந்த வெள்ளிக்கிழமை முடிவில் இருந்த அளவை விட 521 புள்ளிகள் அதிகமாகும்.
பங்குச் சந்தை வர்த்தகம் தொடர்ந்து அதிகரித்ததையடுத்து பிற்பகல் 2.45 மணிக்கு பங்குச் சந்தைக் குறியீடு 19,014 புள்ளிகளை எட்டியது. இன்று ஒரு நாளில் மட்டும் 595 புள்ளிகள் அதிகரித்துள்ளது.