இன்று மும்பை பங்குச் சந்தையில் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு 788 புள்ளிகள் அதிகரித்தது. பங்குகளின் வர்த்தகம் ஏற்ற இறக்கமாக இருந்தது. அதிகளவு சரிவு ஏற்படவில்லை. இறுதியில் நேற்று இறுதி நிலவரத்தை விட 378 புள்ளிகள் அதிகரித்து 18,658.25 புள்ளிகளாக முடிந்தது. (நேற்றைய இறுதி நிலவரம் 18280.24 )
இதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டியும் 114.20 புள்ளிகள் அதிகரித்து இறுதியில் 5,441.45 புள்ளிகளாக முடிவடைந்தது. (நேற்றைய இறுதி நிலவரம் 5327.25 )
எல்லா நிறுவனங்களும் அரை ஆண்டு இலாப - நட்ட அறிக்கையை வெளியிட்டு வருகின்றன. இதனால் தகவல் தொழில்நுட்பம், இயந்திரங்கள் உற்பத்தி, ரியல் எஸ்டேட், மற்றம் உலோக உருக்காலைகளின் பங்குகளின் விலை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில் வாகன உற்பத்தி, வாகன உதிரிபாகங்கள் உற்பத்தியில் ஈடுபட்டுள்ள நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இதற்கு காரணம், உற்பத்தி செலவு அதிகரிப்பு, விற்பனை மந்தம் போன்ற தகவல்கள்தான்.