லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷனிடம் இருந்து ரூ 693 கோடி மதிப்புள்ள இயந்திர கட்டுமான ஒப்பந்தத்தை பெற்றுளளது.
இந்தியாவின் இயந்திர கட்டுமானத் துறையின் முன்னணி நிறுவனமான லார்சன் அண்ட் டூப்ரோ, குஜராத் மாநிலத்தில் கோயாலி என்னும் இடத்தில் அமைந்துள்ள இந்தியன் ஆயில் கார்ப்பரேனுக்கு சொந்தமான பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையத்தில், பெட்ரோல் மற்றும் டீசலில் கலந்துள்ள சல்ஃபர் குறைப்பதற்கான இயந்திரங்களை நிறுவும் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.
இந்த ஒப்பந்தத்தின் படி சல்பர் குறைக்கும் இயந்திரத்தை நிறுவுவதுடன் அமின் என்ற வேதிப்பொருளை பிரித்தெடுத்தல், நீரை பிரித்து எடுத்தல், மற்றும் வாயுவை குளிர்ச்சியாக்குதல் ஆகிய இயந்திரங்களும் நிறுவப்படும்.
பெட்ரோலிய நிறுவனங்கள் மாசு கட்டுப்பாட்டு விதிகளின்படி குறைந்த அளவு சல்ஃபர் கலந்துள்ள பெட்ரோல், டீசலை விற்பனை செய்ய வேண்டும்.
இந்த விதிகளை கடைப்பிடிப்பதற்காக, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், குஜராத் மாநிலத்தில் கோயாலி பெட்ரோல் சுத்திகரிப்பு நிலையத்தில் சல்ஃபர் பிரித்தெடுக்கும் இயந்திரத்தை நிறுவுகிறது. இதற்கான ஒப்பந்தத்தை லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம் பெற்றுள்ளது.