மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் 282 புள்ளிகள் சரிந்தது. கடந்த ஒரு வாராமாக அதிகரித்து வந்து குறியீட்டு எண், இன்று குறைந்தது.
சோனியா காந்தி அமெரிக்க இந்தாயாவிற்கும் ஏற்பட்டுள்ள அணுசக்தி உடன்பாட்டை எதிர்ப்பவர்கள், நாட்டின் வளர்ச்சிக்கு எதிரிகள் என்று இடது சாரிகளை பெயர் குறிப்பிடாமல் நேற்று கூறினார். இதற்கு ப இடதுசாரிகளும் பதிலளித்தனர். நாட்டின் மீது காங்கிரஸ் கட்சி தேர்தலை திணிக்கிறது என்று இடதுசாரிகள் குற்றம் சாட்டினார்கள்.
இதன் எதிரொலி பங்குச் சந்தையிலும் ஒலித்தது. அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டு விட்டது என்ற அச்சம் காரணமாக பங்குகளின் விலைகள் குறைந்தன. செப்டம்பர் 19 ந் தேதி முதல் பங்குகளை வாங்கிய அந்நிய முதலீட்டு நிறுவனங்கள், இன்று பங்குகளை வாங்குவதில் ஆர்வம் காண்பிக்கவில்லை.
காலையில் இருந்தே நிலையாக இல்லாமல் ஏற்ற இறக்கமாக இருந்தது. ஒரு நிலையில் குறியீட்டு எண் 17,982.59 புள்ளிகளை தொட்டது. மிக குறைந்த அளவாக 17,322.14 புள்ளிகளாக இறங்கியது. இது வெள்ளிக் கிழமை இறுதி நிலவரத்தை விட 281.59 புள்ளிகள் குறைவு (வெள்ளிக் கிழமை இறுதி 17,773.36. புள்ளிகள் )
இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் 100.75 புள்ளிகள் சரிந்தது. இறுதியில் 5,085.10 புள்ளிகளாக முடிந்தது. (வெள்ளிக் கிழமை இறுதி 5,185.85 புள்ளிகள்)