பங்கு குறியீட்டு எண் 182 புள்ளிகள் சரிவு!

Webdunia

வியாழன், 4 அக்டோபர் 2007 (17:14 IST)
மும்பை பங்குச் சந்தையில் இன்று காலையில் இருந்தே பங்குகளின் விலைகள் குறைய ஆரம்பித்தன. கடந்த பத்து நாட்களாக ஏறுமுகமாக இருந்த பங்குச் சந்தை இன்று இறங்கு முகமாக இருந்தது.

காலையில் நேற்று இறுதி நிலவரத்தை விட 49 புள்ளிகள் குறைவாகவே பங்குகளின் வர்த்தகம் தொடங்கியது. (நேற்றைய இறுதி குறியீட்டு எண் 17,861.95 புள்ளிகள்). காலையில் வர்த்தகம் 17,799.63 புள்ளிகளில் தொடங்கியது. மதியம் 1 மணியளவில் 182 புள்ளிகள் குறைந்தது. (குறியீட்டு எண் 17,664.92)

இதே போல் தேசிய பங்குச் சந்தையிலும் பங்குகளின் விலை குறைந்து , குறியீட்டு எண் நிப்டி 30 புள்ளிகள் குறைந்தது. தேசிய பங்குச் சந்தையில் காலையில் இருந்தே பஙகுகளின் விலைகளில் ஏற்ற, இறக்கம் தெரிந்தது. காலையில் 10.30 மணியளவில் நிப்டியின் 5232.85 புள்ளிகளைத் தொட்டது. 12 மணியில் இருந்து விலைகள் குறைந்து, நிப்டி குறியீட்டு எண் குறையத் தொடங்கியது. 1 மணியளவில் நிஃப்டி 5,156 புள்ளிகளாக குறைந்தத

இதே போல் மற்ற பிரிவுகளில் உள்ள குறியீட்டு எண்ணும் குறைந்தது.

கடந்த ஒரு வாரமாக விலைகள் அதிகரித்துவந்த பங்குகளின் விலைகள் குறையும் என்ற எதிர்பார்ப்புடன், இது துறையைச் சாரந்த நிபுணர்கள் இருந்தனர்.

இதனால் பெரிய அளவில் அதிர்ச்சி காணப்படவில்லை. மேலும் குறியீட்டு எண் குறையும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இன்று ஐ.ி.ஐ.ி.ஐ வங்கியின் பங்கு விலை 2.48 விழுக்காடு குறைந்து ரூ.1,061 ஆகவும், ஹெச்.ி.எப்.சியின் பங்கு 1.49 விழுக்காடு குறைந்து ரூ.1,410.20 ஆகவும், பாரத ஸ்டேட் வங்கியின் பங்கு 0.49 விழுக்காடு குறைந்து ரூ.1,900 ஆக இருந்தது.

ரிலையன்ஸ் எனர்ஜியின் பங்கு விலை 4.26 விழுக்காடு அதிகரித்து ரூ.1,512.20 ஆக இருந்தது.

பார்தி டெல், ரிலையன்ஸ் இன்டஸ்டிரிஸ், ரான்பாக்ஸ் லெபராட்டரிஸ், பஜாஜ் ஆட்டோ பங்குகளின் விலை அதிகரித்தது.

இந்திய பங்குச் சந்தை மட்டுமல்லாமல், மற்ற ஆசிய நாட்டு பங்குச் சந்தைகளான, ஹாங்காங், தைவான், ஜப்பான் பங்குச் சந்தையிலும் பங்குகளின் விலைகள் குறைந்தன. இதன் குறியீட்டு எண்களும் குறைந்தன.

அதே நேரத்தில் சிங்கப்பூர் பங்குச் சந்தையின் குறியீட்டு எண் 0.33 விழுக்காடு அதிகரித்தது.

அமெரிக்க பங்குச் சந்தையிலும் குறியீட்டு எண் குறைந்தன. டோவ் ஜோன் இன்டஸ்டிரியல் இன்டெக்ஸ் 79.29 புள்ளிகளும், நாஸ்டாக் குறியீட்டு எண் 17.68 புள்ளிகளும் குறைந்தன. இதற்கு காரணம் தகவல் தொழில் நுட்ப நிறுவன பங்குகளின் விலை குறைந்ததே. மற்றொரு காரணம் வேலை இல்லாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததே. இது தொடர்பான புள்ளி விபரம் அறிவிக்கப்பட்டவுடன், நுகர்வோர்களின் வாங்கும் சக்தி குறையம் என்ற அச்சத்தில், பங்குகளின் விலையும் குறைய தொடங்கின.

வெப்துனியாவைப் படிக்கவும்