பங்குச் சந்தை குறியீட்டு எண் 17,000 தாண்டும்?

Webdunia

செவ்வாய், 25 செப்டம்பர் 2007 (13:26 IST)
இன்று காலை மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் விறு விறுப்பாக இருந்தது. காலையில் வர்த்தகம் தொடங்கியவுடனேயே குறியீட்டு எண் 16,890.75 புள்ளிகளைத் தொட்டது. இது நேற்று மாலையில் இருந்ததை விட 45 புள்ளிகள் அதிகம். (நேற்றைய இறுதி நிலவரம் 16,854.83 புள்ளிகள்)

இதேபோல் தேசிய பங்குச் சந்தையிலும் காலையிலேயே வர்த்தகம் விறு விறுப்பாக இருந்தது. காலையில் தொடங்கியவுடேயே நிப்டி குறியீட்டு எண் 7 புள்ளிகள் அதிகரித்தது (நேற்றைய இறுதி நிலவரம் 4,932.20 புள்ளிகள்)

ஆனால் மதியம் 12 மணியளவில் குறியீட்டு எண் சரிந்தது.

தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களின் பங்குகள் வரவேற்பை பெறவில்லை. இதற்கு காரணம் சமீபத்திய டாலரின் மதிப்பு சரிவே. இந்த நிறுவனஙகள் வருவாயில் பெரும் பகுதியை டாலர் செலவாணியில் பெறுகின்றன.

காலையில் பார்தி ஏர்டெல், ரான்பாக்ஸ் மற்றும் ஒ.என்.ி.சி நிறுவனங்களின் பங்குகளுக்கு வரவேற்பு இருந்தது.

செயற்கோள் தொடர்பு தடை ஏற்படுலதால், இன்று முதல் அக்டோபர் 9 ந் தேதி வரை, பங்கு பரிவர்த்தைனை நேரம் 45 நிமிடம் நீடிக்கப்பட்டுள்ளது.

மும்பை பங்குச் சந்தையில் காலை 11.25 மணி முதல் 12.10 வரை வர்த்தகம் நிறுத்தப்படும் இதற்கு பதிலாக மாலை 4.15 வரை வர்த்தகம் நடைபெறும்.

தேசிய பங்குச் சந்தையில் காலை மணி 11.25 நிமிடம் முதல் 12.10 வரை நிறுத்தப்படும். இதற்கு பதிலாக மதியம் 3.30 மணிக்கு முடிவடைவதற்கு பதிலாக 4.15 மணி வரை வர்த்தகம் நடைபெறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்