பன்ஜி இந்தியா நிறுவனம் டால்டா என்ற வர்த்தகப் பெயரை இணைத்து, "டால்டா சுத்திகரிக்கப்பட்ட சூரிய காந்தி எண்ணெயை" சென்னையில் அறிமுகப்படுத்தியது.
இதன் அறிமுக விழாவில் பன்ஜி இந்தியா நிறுவனத்தின் செயல் இயக்குநர் ஆதிராஜ் சரின் பேசும் போது, இந்த சூரிய காந்தி எண்ணெயை அறிமுப்படுத்துவதன் மூலம், டால்டா என்ற வர்த்தகப் பெயர் இணைந்த மற்றொரு பொருளை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி உள்ளோம்.
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் சூரியகாந்தி சமையல் எண்ணெய் அதிகளவில் விற்பனையாகின்றது. நாங்கள் அறிமுகப்படுத்தியுள்ள இந்த சூரியகாந்தி எண்ணெய் 100 விழுக்காடு தூய்மையானது. இதனை மக்களிடம் பிரபலப்படுத்துவதற்காக தொலைக்காட்சி உட்பட பல்வேறு ஊடகங்களில் விளம்பரம் செய்ய திட்டமிட்டுள்ளோம்.
எங்கள் நிறுவனம் மொத்த சூரியகாந்தி எண்ணெய் விற்பனையில், குறைந்த பட்சம் 10 விழுக்காட்டையாவது கைப்பற்ற திட்டமிட்டுள்ளது. ரூ.80 கோடி மதிப்பிற்கு விற்பனை செய்ய முடியும் என்று எதிர்பார்க்கின்றோம் என்று தெரிவித்தார்.