பங்குச் சந்தைகளில் முன்னேற்றம்

Webdunia

வியாழன், 26 ஜூலை 2007 (12:08 IST)
சர்வதேச பங்குச் சந்தைகளில் ஏற்பட்ட முன்னேற்றத்தின் காரணமாக விலை உயர்ந்த பங்குகளின் முதலீடு அதிகரித்ததால் இந்திய பங்குச் சந்தைகளில் இன்று காலை துவக்கத்தில் இருந்தே சுறுசுறுப்பான வணிகம் நடந்து வருகிறது,

மும்பை பங்குச் சந்தை வணிகத்தைத் துவக்கிய 5 நிமிடத்திலேயே 112.95 புள்ளிகள் உயர்ந்து 15,812.27 புள்ளிகளை எட்டியது.

நேற்றைய வணிகத்தில் 96 புள்ளிகளை மும்பை பங்குச் சந்தை குறியீடு இழந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தேசப் பங்குச் சந்தை குறியீடு 26 புள்ளிகள் உயர்ந்து 4,615 புள்ளிகளாக அதிகரித்துள்ளது.

நெதர்லாந்தின் ராயல் பிலிப் நிறுவனத்துடன் இந்தியாவின் இன்போசிஸ் டெக்னாலஜிஸ் நிறுவனம் 250 மில்லியன் டாலர் அயல் வணிக ஒப்பந்தத்தைப் பெற்றதன் காரணமாகவும் பங்குச் சந்தை வணிகத்தில் இந்த முன்னேற்றம் ஏற்படுவதற்கு காரணமாக அமைந்தது.

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ், எல்.என்.டி., விப்ரோ, சத்யம் இன்போசிஸ், டாடா ஸ்டீல், பஜாஜ் ஆட்டோ, மாருதி உத்யோக் ஆகியவற்றின் பங்குகளின் விலைகளும் அதிகரித்துள்ளன.

(பி.டி.ஐ)

வெப்துனியாவைப் படிக்கவும்