மும்பை பங்குச் சந்தை குறியீடு 15,440 புள்ளிகளை எட்டியது

Webdunia

செவ்வாய், 17 ஜூலை 2007 (16:11 IST)
அதிகவிலை பங்குகளில் முதலீடு அதிகரித்ததால் மும்பை பங்குச் சந்தை குறியீடு இன்றைய வர்த்தகத்தில் மிக அதிகபட்சமாக 15,440 புள்ளிகளை எட்டியது.

டி.சி.எஸ். நிறுவனத்தின் காலாண்டு அறிக்கை, காவிரி கரையில் எரிவாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதால் ரிலையன்ஸ் எனர்ஜி, சத்தியம் கம்ப்யூட்டர்ஸ், விப்ரோ, ஏ.சி.சி., அம்புஜா சிம்மெண்ட்ஸ் ஆகிய பங்குகளில் அன்னிய நிறுவன முதலீடுகள் அதிகரித்ததை அடுத்து தேசப் பங்குச் சந்தைகளில் இன்று காலை முதல் முன்னேற்றம் காணப்பட்டது.

தேசப் பங்குச் சந்தை 25 புள்ளிகள் உயர்ந்து 4,537 புள்ளிகளைத் தொட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்