குறைந்த கட்டணத்தில் விமான சேவை: டைகர் ஏர்வேஸ்

Webdunia

புதன், 4 ஜூலை 2007 (13:53 IST)
இந்தியாவில் குறைந்த கட்டணத்தில் விமான சேவையை தொடங்குவதாக டைகர் ஏர்வேஸ் விமானம் நிறுவனம் அறிவித்துள்ளது.

வரும் அக்டோபர் 28 ஆம் தேதி முதல் சிங்கப்பூரில் இருந்து சென்னைக்கு வாரத்தில் 4 முறை விமான சேவையை டைகர் ஏர்வேஸ் தொடங்குகிறது. அதேபோல் அக்டோபர் 30 ஆம் தேதி முதல் கொச்சிக்கு விமான சேவையை தொடங்குகிறது.

கொல்கத்தா, கோவா, கோழிக்கோடு ஆகிய நகரங்களுக்கும் டைகர் ஏர்வேஸ் விரைவில் விமான சேவையை தொடங்கயுள்ளது. 2004 ஆம் ஆண்டு விமான சேவையை தொடங்கிய டைகர் ஏர்வேஸ், தற்போது தெற்கு ஆசிய நாடுகள், சைனா, ஆஸ்ட்ரேலியா ஆகிய நாடுகளுக்கு விமான சேவையை விரிவுபடுத்தியுள்ளது.

இந்தியாவில் இருந்து அதிக அளவில் சுற்றுலா பயணிகள் சிங்கப்பூருக்கு வருவதால் டைகர் ஏர்வேஸ் விமான சேவை பெரிதும் பயனுள்ளதாக அமையும் என விமான நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தாண்டு மே மாதம் இந்தியாவில் இருந்து 98,000 பேர் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்