உலக வங்கியில் அதிக எழுச்சியுடன் பொருளாதார வளர்ச்சி அடைந்து வரும் சீனா, இந்தியா உட்பட வளரும் நாடுகளுக்கு அதிக வாக்குரிமை அளிப்பது என்று உலக வங்கி முடிவு செய்துள்ளது.
உலக வங்கி, சர்வதேச நிதியம் (ஐ.எம்.எப்) ஆகிய சர்வதேச நிதி அமைப்புகளில் அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளுக்கு அதிக வாக்குரிமை உள்ளன. இந்த நாடுகள் உலக வங்கி, சர்வதேச நிதியத்தின் எந்த திட்டத்தையும் நிறுத்திவைக்கும் அளவுக்கு செல்வாக்கு பெற்றுள்ளன.
இவற்றின் செயல்பாடுகளை விரிவாக்க வேண்டும். தற்போது எழுந்துள்ள சூழ்நிலைக்கு ஏற்ப உலக் வங்கி, சர்வதேச நிதியத்தின் செயல்பாடுகளை மாற்றி அமைக்க வேண்டும். சிர்திருத்தம் மேற்கொள்ள வேண்டும். குறிப்பாக வளரும் நாடுகளுக்கு அதிக வாக்குரிமை வழங்கப்படவேண்டும் என்று நீண்ட நாட்களாக கூறப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வாஷுங்டனில் நேற்று முடிவடைந்த உலக வங்கி, சர்வதேச நிதியத்தின் வருடாந்திர கூட்டத்தில், இந்தியா, சீனா, பிரேசில் உட்பட வளரும் நாடுகளுக்கு அதிக வாக்குரிமை அளிப்பது என முடிவு செய்யப்பட்டது. இதன்படி வளரும் நாடுகளுக்கு 4.59 விழுக்காடு வாக்குரிமை அதிகமாக கிடைக்கும்.
இந்தியாவுக்கு வாக்குரிமை 2.77 விழுக்காட்டில் இருந்து 2.91 விழுக்காடு கிடைக்கும்.
இதே போல் சீனாவின் வாக்குரிமை 2.77 விழுக்காட்டில் இருந்து 4.42 விழுக்காடாக அதிகரிக்கும் என்று உலக வங்கி, சர்வதேச நிதியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.