கல்விக்கடன் பெறுவது சம்பந்தமாக மாணவர்கள், பெற்றோர்கள் வசதிக்காக தமிழ்நாடு மாநில வங்கியாளர்கள் குழுமத்தின் அமைப்பாளர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கல்விக்கடன் திட்டத்தின் முக்கிய அம்சங்களை கூறியுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, இந்திய அரசாங்கத்தின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இந்த கல்விக்கடன் திட்டம் வழங்கப்படுகிறது. திட்டத்தின் முக்கிய அம்சங்கள் வருமாறு :
மாணவர்கள் இந்தியாவில் படிப்பதற்கு ரூ.10 லட்சம் வரையிலும், வெளிநாடுகளில் படிப்பதற்கு ரூ.20 லட்சம் வரையிலும் கடனுதவி வழங்கப்படும்.
கல்விக்கடன் தொகை பெற பெற்றோர், மாணவர் ஆகிய இருவரும் விண்ணப்பப் படிவம், இதர ஆவணங்களிலும் கையொப்பம் இட வேண்டும்.
ரூ.4 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு விளிம்புத் தொகை தேவை இல்லை.
ரூ.4 லட்சத்திற்கு மேலான கடன் தொகைக்கு இந்தியாவில் படிப்பதற்கு 5 விழுக்காடும், வெளிநாட்டில் படிப்பதற்கு15 விழுக்காடும் விளிம்புத் தொகையாக செலுத்த வேண்டும்.
ரூ.4 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு ஈடு தேவையில்லை.
ரூ.4 லட்சத்திற்கு மேல் ரூ.7.50 லட்சம் வரையிலான கடன் தொகைக்கு திருப்திகரமான தனி நபர் ஜாமீன் கொடுக்க வேண்டும்.