ரூபாயின் பணவீக்கம் குறைந்தது!

Webdunia

வெள்ளி, 19 அக்டோபர் 2007 (15:47 IST)
இந்த வருடம் அக்டோபர் 6 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் பணவீக்கம் 3.07 விழுக்காடாக இருப்பதாக அறிவிக்கப்படுள்ளது. இது கடந்த ஐந்து ஆண்டுகளில் நிலவிய பணவீக்கத்தின் மிக குறைந்த அளவாகும்.

பணவீக்கம் குறைந்ததற்கு காரணம் உணவுப் பொருட்கள், ஜவுளி, மற்றும் தாதுப் பொருட்களின் விலை குறைந்ததே.

இதற்கு முந்தைய வாரம் பணவீக்கம் 3.26 விழுக்காடாக இருந்தது. சென்ற வருடம் இதே வாரத்தில் பணவீக்கம் 5.36 விழுக்காடாக இருந்தது.

எல்லா பொருட்களின் மொத்த விலை குறியீட்டு அட்டவணை சென்ற வாரத்தைவிட 0.2 விழுக்காடாக குறைந்தது. இது சென்ற வாரம் 215.1 புள்ளிகளாக இருந்தது. இந்த வாரம் 214.7 புள்ளிகளாக குறைந்தது.

இந்த அட்டவணையில் உள்ள பொருட்களில் பழங்கள், காய்கறி விலை 4 விழுக்காடு குறைந்தது. இதே போல் மைதா விலை 2 விழுக்காடும், பாசிப் பருப்பு, மீன் போன்ற கடல் சார் உணவுப் பொருட்கள். முட்டை ஆகியவற்றின் விலை 1 விழுக்காடு குறைந்தது.

மற்ற பருப்புகளின் விலை 1 விழுக்காடு அதிகரித்தது.

உணவுப் பொருட்கள் அல்லாத அட்டவணையில் உள்ள மற்ற பொருட்களின் விபரம்.

பருத்தி விலை 2 விழுக்காடு குறைந்தது. பருத்தி விதை, கடுகு விதை, ஆளி விதை ஆகியவற்றின் விலை தலா 1 விழுக்காடு அதிகரித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்