இந்தியாவின் பெரிய தனியார் துறை வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி வாடிக்கையாளர்களின் வீட்டை தேடிச் சென்று வங்கிச் சேவைகளை அளிக்கும் திட்டத்தை இன்று அறிமுகப்படுத்தி உள்ளது.
பாங்க் அட் ஹோம் என்று அழைக்கப்படும் இந்த திட்டத்தின் கீழ் சேமிப்பு கணக்கு நடப்பு கணக்கு வைத்துள்ள வங்கியாளர்கள் பயன் பெறலாம்.
இனணயத் தளம் அல்லது தொலை பேசி மூலமாக வங்கியை தொடர்பு கொள்ள வேண்டும். வாடிக்கையாளர்கள் ரொக்க பணம், காசோலை, வரைவோலை, பே-ஆர்டர் போன்றவற்றில் தங்களுக்கு தேவையானதை கூறினால் போதும். வங்கி உழியரே அவர்களின் வீட்டை தேடி வந்து கொடுப்பார்.
இதே போல் காசோலை, வரைவோலை, ரொக்கம் போன்றவர்களையும் வங்கியல் செலுத்த இணையம் அல்லது தொலைபேசி மூலம் வங்கிக்கு தகவல் தெரிவித்தால் போதும் வங்கி அதிகாரி வீட்டை தேடி வந்து வாங்கிக் கொள்வார். இந்த சேவை 28 நகரங்களில் உள்ள 294 கிளைகள் மூலம் வழங்கப்படும்.
இது குறித்து வங்கியின் ரீடெய்ல் லயாபிலிட்டி பிரிவின் தலைமை அதிகாரி மகேந்தர் ஜூனிஜா கூறுகையில், ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு அதிகளவு சேவைகளை தொடர்ந்து வழங்கி வருகிறது. பாங்க் அட் ஹோம் முறையில் வாடிக்கையாளர்கள் தங்களின் இருப்பிடத்தில் இருந்த படியே ரொக்கம், காசோலை போன்ற சேவைகளை பெறலாம் என்று தெரிவித்தார்.