வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில் இன்று காலை 1 டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 9 பைசா அதிகரித்தது.
காலையில் 1 டாலர் ரூ 39.41 பைசாவாக இருந்தது. வெள்ளிக்கிழமை மாலை விலை 1 டாலர் ரூ. 39.49/50.
ரிசர்வ் வங்கி கடந்த சில நாட்களாக டாலரின் மதிப்பு குறைந்து, இந்திய ரூபாயின் மதிப்பு அதிகரிக்காமல் இருக்க சில நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதால் வந்து குவியும் டாலர்களை, பொதுத்துறை வங்கிகள் வாங்கி வருகின்றன. பணப்புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளையும் ரிசர்வ் வங்கி எடுத்து வருகிறது.