சென்செக்ஸ் 500 புள்ளிகள் உயர்வு

வெள்ளி, 24 ஜூன் 2011 (17:48 IST)
மும்பைப் பங்குச் சந்தையில் மார்ச் 1ஆம் தேதிக்குப் பிறகு இன்று மிகப்பெரும் உயர்வு காணப்பட்டது. 500 புள்ளிகளுக்கும் மேல் சென்செக்ஸ் இன்று உயர்ந்து மீண்டும் 18,000 புள்ளிகளைக் கடந்துள்ளது.

இன்றைய வர்த்தக முடிவில் சென்செக்ஸ் 513.19 புள்ளிகள் அதிகரித்து 18,240.68 புள்ளிகளாக நிறைவுற்றது.

தேசியப் பங்குச் சந்தையின் முக்கியக் குறியீடான நிப்டியும் இன்று 151.25 புள்ளிகள் அதிகரித்து 5,471.25 புள்ளிகளாக நிறைவுற்றது.

நுகர்வோர் பொருட்கள் நிறுவன பங்குகள் தவிர மற்ற துறைகளின் பங்குகள் இன்று உயர்ந்தன. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் பங்குகள் சற்றே சரிவு கண்டது.

தகவல் தொழில்நுட்ப முதன்மை நிறுவனமான இன்ஃபோசிஸ் நிறுவனப் பங்குகளின் விலை இன்று 3.17% அதிகரித்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்