மும்பைப் பங்குச் சந்தையில் இன்று காலை 99 புள்ளிகள் உயர்வுடன் துவங்கிய சென்செக்ஸ் சரிவதும், உயர்வதுமாக இருந்து இறுதியில் வர்த்தக முடிவில் 9 புள்ளிகள் மட்டும் குறைந்து 17,550 புள்ளிகளில் முடிந்தது.
தேசியப் பங்குச்சந்தையிலும் இன்று தடுமாற்றம் காணப்பட்டது. பின்னர், வர்த்தக முடிவில் குறியீட்டெண் நிஃப்டி 2 புள்ளிகள் உயர்ந்து 5,278 புள்ளிகளில் முடிவடைந்தது.
மாருதி சுஸுகி, டிசிஎஸ், பார்தி ஏர்டெல், ஜின்டால் ஸ்டீல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் சரிவு ஏற்பட்டது.
சிப்லா, பஜாஜ் ஆட்டோ, டாடா பவர், இன்போசிஸ், ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் விலையில் உயர்வு காணப்பட்டது.