சென்செக்ஸ் 93 புள்ளிகள் உயர்வு

வெள்ளி, 31 டிசம்பர் 2010 (10:19 IST)
மும்பைப் பங்குச் சந்தையின் முக்கியக் குறியீட்டெண் சென்செக்ஸ் இன்று துவக்க வர்த்தகத்தில் 93 புள்ளிகள் அதிகரித்து 20,482.26 புள்ளிகளாக இருந்தது.

தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 46 புள்ளிகள் அதிகரித்து 6,106.40 புள்ளிகளாக உள்ளது.

மற்ற ஆசியப் பங்குச் சந்தைகளிலும் உயர்வு நிலை காணப்பட்டது. ஹாங்காங்கின் ஹெங்செங் குறியீடு 0.13% அதிகரித்தது.

அமெரிக்காவின் டவ் ஜோன்ஸ் தொழிற்துறை பங்குக் குறியீடு 01.4% சரிவு கண்டு நிறைவடைந்துள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்