அற்புத மருத்துவ குணங்களை கொண்ட மூலிகை கொத்தமல்லி!

Webdunia
கொத்தமல்லி இலையை அரைத்து முகம் அல்லது உடலின் மேலே பூசிக்கொள்வதால் தோலின் சுருக்கங்கள் குறையும். முகத்தில் கரும்புள்ளிகள் இருப்பின் அவற்றின் மேல் கொத்தமல்லி இலையை அரைத்து பூசினால் கருப்புள்ளிகள் மறையும்.

 

செரிமானப்பிரச்சனை வயிற்று வலி போன்றவை இருப்பின், அவைகளுக்கு மிக சிறந்த தீர்வாக கொத்தமல்லி உள்ளது. அம்மை நோய்க்கும் மருந்தாகவும்  பயன்படுகிறது.
 
புதிய கொத்தமல்லி இலைகளில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பாஸ்பரஸ் போன்ற கனிமச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை  கண் சம்மந்தப்பட்ட நோய்களை குணமாக்கும் தன்மை உடையவை.
 
இரத்ததை சுத்திகரிக்கும் தன்மை கொத்தமல்லிக்கு உள்ளது. உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கண்டிப்பாக அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கொத்தமல்லியின் விதைகளை தேநீராக்கி பருகினால், சிறுநீர் பெருகத்தை அதிகரிக்கும்.
 
கொத்தமல்லி இலைகள் வாயிலுள்ள புண்களை ஆற்றுவதோடு, அது வராமலும் தடுக்கும். மேலும் சுவாசத்தை ஃப்ரெஷ் ஆக்குவதோடு, வாய்ப் புண்களை நன்கு குணப்படுத்தும் தன்மைகொண்டது.
 
உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கொத்தமல்லி இலைகளை உணவில் சேர்த்துகொள்வதால்,ரத்த அழுத்தம் குறைவதாக நிருப்பிக்கப்பட்டுள்ளது. கொத்தமல்லியை ஜூஸ் போட்டு குடிப்பதால், உடம்பிலுள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகளை நீக்கி உடல் எடையை குறைக்க உதவுகிறது.
 
சிறுநீர் சம்மந்தமான தொந்தரவுகளில் இருந்தும் பாதுகாக்கிறது. வாயு தொந்தரவுகளில் இருந்தால் உடனடி தீர்வு தரும். அடிக்கடி உண்டாகும் ஏப்பம் நெஞ்செரிச்சலுக்கும் நிவார்ணமாக உள்ளது.
 
நமது உடலில் உள்ள நாளமில்லா சுரப்பிகள் நன்கு செயல்பட கொத்தமல்லி சிறந்ததாக உள்ளது. மாதவிலக்கு பிரச்சனைகளில் இருந்து விட கொத்தமல்லி சாறு  குடிப்பது மிகுந்த நன்மையை உண்டாக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்