உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும் சிறுநீரக கல்லை வெறியேற்ற என்ன வழி?

Webdunia
சிறுநீரக கல் பிரச்சனை பரவலாக வரும் நோயாக மாறி வருகிறது. சிறு நீரில் உள்ள கிரிஸ்டல் உப்புகள் (கால்சியம், ஆக்சலேட், யூரிக் அமிலம்) ஒன்று திரண்டு சிறுநீர் பாதையில் பல்வேறு அளவுள்ள கற்களாக உருவாகிறது. 

சிறுநீரகத்தில் உற்பத்தியாகி சிறுநீர் குழாய், சிறுநீர்ப்பை வழியாக வெளியேறும். சிறுநீரகத்தில் தான் கல் உற்பத்தியாகி அங்கு தங்கி வளர்கிறது.
 
சிறுநீர் பையில் கல் உருவாகினால் முதலில் முதுகில் வலி துவங்கும். அது முன்பக்கத்தில் இருந்து வயிற்று பகுதிக்கு மாறி, அடிவயிற்றில் வலியை ஏற்படுத்தும்.  பின் தொடை, உறுப்புக்கு பரவி காய்ச்சல் ஏற்படும். இதுதான் சிறுநீரக கல் அடைப்புக்கான அறிகுறி. பரம்பரையாக சுரப்பியின் அதீத இயக்கம் நோய் தொற்றாலும்  வரலாம்.
 
தினமும் மூன்று லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். கோடையில் தினமும் ஒரு இளநீர், மற்ற காலத்தில் வாரம் இரு முறை இளநீர் குடிக்க வேண்டும். பார்லி அரிசியை நன்கு வேக வைத்து நிறைய தண்ணீரோடு குடித்து வந்தால் அதிக சிறுநீர் வெளியேறி, உப்பு சேர்வது தடுக்கப்படும். வாரத்தில் ஒரு முறை இதை  செய்யலாம்.
 
அகத்தி கீரையுடன் உப்பு, சீரகம் சேர்த்து வேக வைத்து, அந்நீரை அருந்தலாம். வாழைத்தண்டு, முள்ளங்கி சாறு, 30 மில்லி அளவு குடித்தால் சிறுநீரக கோளாறு நீங்கி, சிறுநீர் நன்கு பிரியும். 
 
வெள்ளரி, வாழைப்பூ, வாழைத்தண்டினை அதிகம் சாப்பிட வேண்டும். வெள்ளரி, நீராகாரம் தான் சிறுநீரக பிரச்னைக்கு அருமருந்து.
 
உப்பு பிஸ்கட், சிப்ஸ், பாப்கார்ன், அப்பளம், வடகம், வற்றல், ஊறுகாய், கருவாடு, உப்புக்கண்டம், ஸ்டிராங் காபி, சமையல் சோடா, சமையல் உப்பு, சீஸ், சாஸ், கியூப்ஸ் கோக்கோ, சாக்லேட், குளிர்பானம், மது, புகையிலையை முற்றிலும் தவிர்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்