தினமும் சிறிதளவு கொள்ளு சாப்பிடுவதால் என்ன பயன்கள்...?

Webdunia
கொள்ளு அதிக புரதச்சத்து நிறைந்த சிறுதானிய வகையைச் சேர்ந்தது. தினமும் சிறுதளவு கொள்ளினை ஊறவைத்து வெறும் வயிற்றில் உண்டு வந்தால் உங்களின் உடல் எடை விரைவில் குறியும்.

கொள்ளில் பொட்டாசியம் மற்றும் ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் அதிக அளவில் நிறைந்துள்ளது. இவை உங்களுக்கு சிறுநீரக கல் ஏற்படாமல் தடுக்கும். 
 
கொள்ளில் தேவையான அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளதால் அதனை தினமும் உண்டு வரும்பொழுது உங்களுக்கு மலசிக்கல் போன்ற பிரச்சினை ஏற்படாமல்  தடுக்கும்.
 
கொள்ளுக்கு இயற்கையாகவே ஆண்களின் விந்தணுவினை அதிகரிக்கும் சக்தி உண்டு. தினமும் சிறிதளவு கொள்ளினை உண்டு வருபவர்களுக்கு விந்தணு குறைபாடு, பிரச்சினைகள் ஏற்படாது.
 
கொள்ளில் அதிக அளவு உடலிற்கு தேவையான புரத சத்து நிறைந்துள்ளது. இதனை நீங்கள் தினமும் உண்டு வந்தால் உடல் தசைகளின் வலிமை அதிகரிக்கும்.
 
பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்னைகளை சரிப்படுத்தும். பெண்கள் கொள்ளு நீரை அருந்தலாம்; சூப்பாகவும் சாப்பிடலாம்.
 
இயற்கையாகவே கொள்ளுக்கு இரத்த சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கும் சக்தி உண்டு. இதில் நிறைந்துள்ள அதிக அளவு நார்ச்சத்து, இரத்த சர்க்கரையின் அளவினை கட்டுக்குள் வைக்கும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்