வீட்டில் உள்ள பொருட்களை கொண்டு சருமத்தில் உள்ள கருமையை போக்கும் வழிகள்...!!

Webdunia
முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளைகள் ஆகியவை மறைய முகம் பொலிவாக இருக்க தினமும் முகத்திற்கு பாசிப்பயறு மாவு பயன்படுத்தலாம்.

முகத்தில் ஏற்படும் எண்ணெய் பசையை போக்கும் அழகு குறிப்புகள்
ஒரு பவுலில் பாசிப்பயறு மாவு ஒரு ஸ்பூன், அரை ஸ்பூன் தேன் இரண்டையும் கலந்து முகத்தில் தடவிவிட்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்து வந்தால் ஒரே வாரத்தில் முகத்தில் நல்ல மாற்றம் ஏற்படும்.
 
ரோஸ் வாட்டரில் சிறிது பால் சேர்த்து கலந்து, தினமும் இரவில் படுக்கும் முன் தடவி இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் கழுவ வேண்டும். இப்படி செய்து வந்தால், முகத்தில் உள்ள கருமை நீங்கி, முகம் வெள்ளையாக பளிச்சென்று காணப்படும்.
 
கற்றாழை ஜெல்லைக் கொண்டு தினமும் முகத்தை மசாஜ் செய்து ஊற வைத்து கழுவி வந்தால், முகத்தில் வரும் பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் நீங்கி, முகம் அழகாகவும், வெள்ளையாக மாறியிருப்பதையும் காணலாம்.
 
பெண்களின் முழங்கை மற்றும் கழுத்தில் உள்ள கருமையை போக்க, பாசிப்பயறு மாவுடன் தயிர், மஞ்சள் தூள் ஆகியவை கலந்து அந்த இடங்களில் நன்கு தடவி அரை மணி நேரம் கழித்து கழுவிவிட்டு, பிறகு அந்த இடங்களில் நல்லெண்ணெய் வைத்து மசாஜ் செய்தால் போதும் விரைவில் கருமை நீங்கிவிடும்.
 
சர்க்கரையில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து கலந்து, அதனைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்தால், சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அனைத்தும் நீங்கி, சரும துளைகளில் உள்ள அழுக்குகள் அனைத்தும் வெளியேறி, சருமம் பொலிவோடு காணப்படும்.
 
சருமம் வெள்ளையாக இருக்க பாசிப்பயறு மாவுடன் எலுமிச்சை சாறு கலந்து முகத்திற்கு தடவி 10 நிமிடங்கள் கழித்து முகத்தில் வெதுவெதுப்பான நீரில் கழுவவேண்டும். வறண்ட சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறு சேர்க்காமல் அதற்கு பதிலாக பால் பயன்படுத்தலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்