காய்கறிகளை எண்ணெய் விட்டு நன்கு வதக்கி வைத்துக்கொள்ளவும். மற்றொரு கடாயில் கடுகு எண்ணெய்யை ஊற்றி வெந்தயம், கடுகு, பெருஞ்சீரகம், காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை, பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை வறுத்தி கொள்ளவும். அதனுடன் பூண்டைச் சேர்த்து பிறகு மஞ்சள் தூள், மிளகாய்த் தூள் மற்றும் அரைத்த விழுது, புளிக் கரைசல், உப்பு ஆகியவற்றை அதனுடன் சேர்க்கவும்.
தேவைக்கேற்ப குழம்பின் பதத்தை மாற்றிக் கொள்ளவும். (அதாவது திக்காகவும் அல்லது கொஞ்சம் தண்ணீர் போலவும் அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப) அதன் பின்னர் வதக்கப்பட்ட மிளகாய்களையும் கத்தரிக்காய்களையும் சேர்த்து சமைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கவும். சுவையான சேர்த்து பரிமாறவும்.