எள்ளிள் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும் !!

Webdunia
சனி, 5 பிப்ரவரி 2022 (17:58 IST)
எள்ளில் உள்ள செம்புச்சத்து இரத்தக் குழாய்களின் சுருங்கி விரியும் தன்மை அதிகப்படுத்துகிறது. இதனால் இருதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுக்கிறது.


எள்ளில் அதிக அளவு காப்பர் சத்தும், கால்சியச் சத்தும் உள்ளது. மக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி, வைட்டமின ஈ, இரும்புச் சத்து, ஜீங்க் மற்றும் புரதச் சத்து உள்ளது.

எள்ளும், வெல்லமும் சேர்த்து செய்யப்படும் எள்ளுருண்டை அல்லது எள்ளு மிட்டாய் அடிக்கடி உட்கொள்ளலாம். ஏள், வெல்லம், தேங்காய் சேர்த்து பூரணமாக கொண்டு நீராவியில் வேக வைக்கும் கொழுக்கட்மை அல்லது மோதகம் போன்றவற்றை உண்ணலாம்.

சாதத்தில் எள்ளை பொடி செய்து சேர்த்து உண்ணுதல் : எள், காய்ந்த மிளகாய் சேர்த்து அரைத்து எள்ளு பொடியை இட்லி, தோசை போன்றவற்றிற்கு தொட்டு சாப்பிட உபயோகிக்கலாம்.

வைட்டமின் பி1., பி6, நியாசின், தையாமின், ஃபோலிக் அமிலம், ரிபோபிளேவின் போன்ற வைட்டமின்கள் எள்ளில் அபரிதமான அளவில் உள்ளது.

ஒரு கப் பாலில் உள்ள கால்சியச் சத்து ஒரு கையளவு எள்ளில் உள்ளது. பால் சாப்பிட முடியாதவர்கள் எள்ளு மிட்டாய் சாப்பிட்டாலே தேவையான கால்சியம் உடலுக்கு கிடைத்து விடும்.

மூட்டு வலி உள்ளவர்களுக்கு வலியையும், வீக்கத்தையும் எள் குறைக்கிறது. எள்ளில் உள்ள செம்பு சத்து, கால்சியச் சத்து, மக்னீசியம் சத்து போன்றவை மூட்டுகளின் ஜவ்வுகளுக்கு தேவையான பலத்தை கொடுக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்