உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கும் வெங்காயத்தாள் !!

சனி, 2 ஜூலை 2022 (09:32 IST)
வெங்காயத்தாள் நிறைய ஊட்டச்சத்துக்கள் நிறைந்த கீரையாகும். வெங்காயத்தாளனது சாலட் வெங்காயம், சுருள் வெங்காயம், பச்சை வெங்காயம் என பலவாறு அழைக்கப்படுகிறது.


வெங்காயத்தாளில் குறைந்த கலோரிகளே இருக்கின்றன. மேலும் வெங்காயத்தாளில் வைட்டமின் சி, பி2 மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. வெங்காயம் போலவே வெங்காயத்தாளிலும் கூட கந்தக சத்து அதிகமாக உள்ளது.

வெங்காயத்தாள் இதய ஆரோக்கியத்திற்கு நல்லது மேலும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்களை குறைக்கவும் மற்றும் அதனால் உண்டாகும் இதய நோய் அபாயத்தையும் குறைக்கிறது.

வெங்காய தாளில் காணப்படும் விட்டமின் கே இரத்த உறைதலில் முக்கிய பங்கு வகிக்கிறது. வெங்காய தாளானது புற்றுநோய் வளர்ச்சியை தடுக்கிறது. இதில் உள்ள அலிசின் என்னும் வேதிபொருளானது புற்றுநோயினை தடுக்கும் பண்பினைக் கொண்டுள்ளது.

வெங்காயத்தாளில் உள்ள பெக்டின் என்னும் கார்போஹைட்ரேட் பெருங்குடல் புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பைக் குறைக்கிறது.

வெங்காயத்தாள் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல மருந்தாக பயன்படுகிறது. வெங்காயத்தாள் இரத்தத்தில் சேர்ந்துள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்