உடலில் தேங்கியுள்ள நச்சுக்களை வெளியேற்றும் கடுக்காய் !!

வெள்ளி, 1 ஜூலை 2022 (17:15 IST)
கடுக்காய், நெல்லிக்காய், தான்றிக்காய் மூன்றும் கலந்த திரிபலா சூரணத்தை அடிக்கடி நீரில் கலந்து குடித்து வந்தால் உடல் மிகவும் ஆரோக்கியமாக இருக்கும்.


பொதுவாக இரவு உணவுகளுக்கு பின்னர் அரை தேக்கரண்டி அளவு கடுக்காய் பொடி சாப்பிட்டு வந்தால் பெரும்பாலான நோய்கள் நம்மை நெருங்காமல் உடல் பலத்துடன் இருக்க முடியும்.

இளம் வயதினர் மற்றும் நடுத்தர வயதினருக்கு பேன் மற்றும் பொடுகு போன்ற தொல்லைகள் இருந்தால் தேவையான அளவு தேங்காய் எண்ணெய்யுடன் கடுக்காய் பொடியை சேர்த்து காய்ச்சி தினமும் தலைக்கு தேய்த்து வந்தால் பேன் பொடுகு போன்ற தொல்லைகள் நீங்கும்.

பற்களின் ஈறுகளில் ஏற்படும் இரத்த கசிவு மற்றும் வாய் துர்நாற்றம் உள்ளவர்கள் கடுக்காய் பொடியினை வெது வெதுப்பான நீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தாலே போதுமானது இது சிறந்த கிருமி நாசினியாகவும் செயல்படுகின்றது.

ஆண்மை அதிகரிக்க கடுக்காய் பொடி சிறந்த மருந்தாகும். கடுக்காய் உண்பதால் உடலில் தேங்கியிருக்கும் அனைத்து கழிவுகளும் நீங்கி, மலச்சிக்கல், கபம் போன்றவை குணமாகி நீண்ட ஆயுளும் நமக்கு கிடைக்கும்.

உடல் செல்களை புதுப்பித்து உடல்களை வலுவாக்கி இளமை தோற்றத்தை கொடுக்கும். சக்கரை நோய் மற்றும் இதய நோய் போன்றவற்றை கட்டுப்படுத்தும் தன்மை கடுக்காய்க்கு உண்டு.

கடுக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் தேங்கி இருக்கும் அனைத்து விதமான நச்சுக்களும் வெளியேறும். ஆறாத காயங்கள் உள்ளவர்கள் காயங்கள் மீது கடுக்காய் பொடியை பயன்படுத்தினால் கிருமி தொற்றுக்கள் நீங்கி காயங்கள் வேகமாக ஆறும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்