அன்றாட உணவில் கேழ்வரகு சாப்பிடுவதால் என்ன நன்மைகள்...?

வெள்ளி, 1 ஜூலை 2022 (14:16 IST)
நமது அன்றாட உணவில் கேழ்வரகு முக்கியம் இடம்பெறுகின்றது. ஆனால் இன்றோ காணக் கிடைக்காத அரிய வகை தானியமாக மாறிவிட்டது.


கேழ்வரகில் ஏராளமான சத்துக்கள் உண்டு. கல்சியம், பொட்டாசியம், புரதம், வைட்டமின், போலிக்கமிலம், பாலிப்பினால்ஸ், நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடன்ஸ் போன்ற பல சத்துக்கள் உண்டு.

ஏனைய தானியங்களை விடவும் கேழ்வரகு அதிக கால்சியம், பாஸ்பரஸ் கொண்டது. இதனால் எலும்பைப் பலப்படுத்த உதவும். கேழ்வரகு உட்கொண்டு வந்தால் வளரும் குழந்தைகளின் எலும்பு வளர்ச்சிக்கும், முதிவர்களின் எலும்பு வலிமைக்கும் உதவும்.

கேழ்வரகை வறுத்து உணவோடு சாப்பிட்டு வந்தால் உயர் இரத்த அழுத்தம், கல்லீரல் நோய்கள், இதய நோய், ஆஸ்துமா போன்ற நோய்களில் இருந்து குணம் அடையலாம்.

உணவுப் பொருட்களினால் ஏற்படும் வாந்தி பேதி போன்ற ஒவ்வாமைக்கு மாற்று உணவாக பயன்படுத்தலாம். கேழ்வரகு கர்ப்பிணித் தாய்மார்களுக்கு சிறந்தது. மற்றும் பிள்ளை பெற்ற தாய்மார்களுக்கு பால் சுரக்காமல் இருந்தால் அதை சீர் செய்ய உதவுகின்றது.

45 வயதிற்குப் பின்னர் மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு ஏற்படும் எலும்புத் தேய்வைக் குணப்படுத்த உதவுகின்றது. உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து நல்ல கொழுப்பின் அளவை சரி செய்யவும் இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ராலை சமநிலைப்படுத்தவும் உதவுகிறது.

இரத்தச் சோகையில் அவதிப்படுபவர்கள் மற்றும் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளவர்கள் கேழ்வரகை சாப்பிட்டு வந்தால் அதனை சீர்செய்ய முடியும். கேழ்வரகில் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகை உள்ளவர்களுக்கு நோயை குணப்படுத்த உதவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்