தலைமுடிக்கு தேவையான வைட்டமின்கள் காணப்படும் செர்ரி !!

வெள்ளி, 1 ஜூலை 2022 (18:01 IST)
உடலில் நரம்பு கோளாறுகள் மற்றும் மன அழுத்தம் அதிகம் கொண்டவார்கள் தூக்கமின்மை பிரச்சனையால் பாதிக்கப்படக்கூடும் மேற்கண்ட பாதிப்புகள் கொண்டவர்கள் செர்ரி அதிகம் சாப்பிட்டு வருவது நல்லது.


செர்ரி பழங்கள் உடலின் நரம்புகளில் ஏற்பட்டிருக்கும் இறுக்கத்தை தளர்த்தி, ஆழ்ந்த தூக்கத்தை தருகிறது. மன அழுத்தங்களையும் பெருமளவிற்கு குறைக்கிறது.

பலருக்கு தலைமுடி கொட்டுதல், பொடுகுத்தொல்லை, தலைமுடி ஈரப்பதம் இல்லாமல் போன்ற பல பிரச்சனைகளால் தலைமுடி உதிர்ந்து விடுகிறது. இதற்கு செர்ரி பழங்களை அடிக்கடி எடுத்துக் கொள்ளலாம். இதில் தலைமுடிக்கு தேவையான வைட்டமின் எ மற்றும் வைட்டமின் ஈ இருப்பதால் தலைமுடியை ஆரோக்கியமாகப் பாதுகாக்கிறது.

இப்பழத்தில் உணவினை செரிக்க உதவும் சத்துகள் அதிகமாக இருக்கிறது. செர்ரி பழங்களை அடிக்கடி சேர்த்து கொள்பவர்களுக்கு மலச்சிக்கல் பிரச்சனைகள் இருந்தால் குணமாகும். உணவு நன்றாக சீரணித்து குடல்களில் இருக்கும் கிருமிகளை சுத்தப்படுத்தி, குடலை பாதுகாக்கிறது.

உடல் அதிகமாக குறைக்க விரும்புகிறவர்கள் செர்ரி பழத்தினை அதிகமாக எடுத்துக்கு கொண்டால் பசியுணர்வை கட்டுபடுத்தி, உடலுக்கு தேவையான சத்தை கொடுத்து எடையை குறைக்க உதவுகிறது. தோலில் சுருக்கங்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. வெண்மையான முகம், இளமையான சருமத்தை கொடுக்கிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்