ஊட்டச்சத்துக்கள் நிறைந்த சிறுதானியங்களின் பயன்கள்

Webdunia
சிறுதானியங்களில் ஊட்டச்சத்து நிறைந்துள்ளன. இவற்றில் 15 சதவீதம் புரதமும் அதிக அளவு நார்ச்சத்தும் உல்ளது. மேலும் இவை வைட்டமின் ஈ, வைட்டமின்  பி லாம்ப்ளக்ஸ், நியாசின், தயமின் மற்றும் ரிபோபிளேவின் போன்றவற்றிற்கு மிகப்பெரிய ஆதாரமாக விளங்குகிறது.
உடலின் சரியான செயல்பாட்டிற்குத் தேவையான பல ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் சிறுதானியங்களில் நிறைந்துள்ளன. இரத்த அணுக்களின் உற்பத்தி  மற்றும் செம்பு ஆகியன நிறைந்த அளவில் உள்ளன.
 
வரகு அரிசியில் சிறந்த மருத்துவக் குணங்கள் உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அலவையும் மூட்டு வலுயையும் குறைக்க உதவுகிறது. வரகுக்  கஞ்சியை சாப்பிட்டால் உடல் பருமன் குறையும். அக்காலத்தில் தேள் கடிக்கு மருந்தாக வரகைப் பயன்படுத்தினர்.
 
சிறுதானியங்களில் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் பாஸ்பரஸ் உள்ளது. இந்தத் தாதுக்கள் அனைத்து தாவர ஊட்டச்சத்துடன் சேரும்போது அனைத்து வகையான நோய்களுக்கும், புற்றுநோய்களுக்கும் எதிராக ஒரு வல்லமை மிக்கப் பாதுகாப்பை உடலில் உருவாக்குகிறது. 
சிறுதானியங்களில் அதிக அளவு இரும்புச்சத்து உள்ளது. எனவே இது இரத்தசோகையைக் குணப்படுத்த உதவும் சிறந்த உணவாகக் கருதப்படுகிறது.  சிறுதானியங்களில் கால்சியமும் உள்ளது. எனவே சிறுதானியங்களை வழக்கமான முறையில் உணவில் சேர்த்துக் கொண்டால் எலும்புகளை வலுவடையச்  செய்கிறது.
 
அரிசி வகைகளில் சாமை சிறந்ததாகக் கருதப்படுகிறது. இது சிறுவர் முதல் பெரியவர் வரை அனைத்து வயதினருக்கும் ஏற்றது. சாமையைச் சமைத்து உண்பதன்  மூலம் உடலில் நோய் எதிர்ப்புச்சக்தி அதிகரிக்கும். அடிக்கடி காய்ச்சலால் துன்பப்படும் குழந்தைகளுக்குச் சாமையைச் சமைத்துக் கொடுப்பதால் ஏற்படும்  நாவறட்சியும் குணமாகிறது.
 
கம்பு இந்தியாவில் விளையும் ஒரு பயிர். இது வளர்வதற்குத் தண்ணீர் அதிகம் தேவையில்லை. இது வெயில் காலங்களிலும் நன்கு வளரும். இது உடல்  சோர்வை நீக்கிப் புத்துணர்ச்சியை அளிக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்