பாத வெடிப்பு பற்றி அதிகம் கவலைப்பட தேவையில்லை. வீட்டில் இருக்கும் சில பொருட்களை கொண்டே எளிதாக பாத வெடிப்பை குணப்படுத்த முடியும்.
எலுமிச்சையில் உள்ள ஆன்டி ஆக்சிடண்ட்டுகள் பாதங்களில் உள்ள வறட்சியைப் போக்கி, நீர்ச்சத்து கொண்டதாக மாற்றும். எலுமிச்சை சாறு, கிளிசரின் மற்றும் பன்னீர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து பாதத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் பாத வெடிப்பு விரைவில் குணமாகும்.
ஒரு கிண்ணத்தில் வெதுவெதுப்பான நீரை எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிதளவு கல் உப்பை சேர்த்துக் கொள்ளவும். அந்த நீரில் 10 துளிகள் எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும். மேலும் அந்த கலவையை உங்கள் பாதங்களில் தேய்த்து மறுநாள் காலை கழுவவும்.
கால்களில் தோல்பகுதி வறண்டு காணப்பட்டால் இரவில் படுக்கும் முன்பு தேங்காய் எண்ணெயை லேசாகத் தடவி நன்கு மசாஜ் செய்ய வேண்டும். இதனால் கால் மிருதுவாக மாறுவதோடு வெடிப்பு ஏற்படாமல் இருக்கும். கால்களை அவ்வப்போது மசாஜ் செய்து வந்தால் பாத வெடிப்பு போன்ற எவ்வித பிரச்னைகளும் ஏற்படாது.
இரண்டு ஸ்பூன் அரிசி மாவுடன், சில துளிகள் தேன் மற்றும் ஆப்பிள் சிடர் வினிகரை சேர்த்து கலந்து ஒரு பேஸ்ட் போல் செய்து கொள்ளவும். பாதங்கள் மிகவும் வறண்டு வெடிப்புகள் அதிகமாக இருந்தால் இந்த கலவையுடன் ஒரு ஸ்பூன் ஆலிவ் அல்லது பாதாம் எண்ணெய்யை சேர்த்துக் கொள்ளலாம்.
இரவு நேரங்களில் ஒரு பாத்திரத்தில் வெதுவெதுப்பான நீரில் உப்பு போட்டு அந்த நீரில் கால்களை சில நிமிடங்களுக்கு வைத்திருந்து கால்கள் சுத்தமான பின் எடுத்து துடைக்க வேண்டும். இதேபோல் சுடுநீரில் ஷாம்பு கலந்தும் பயன்படுத்தலாம். இவ்வாறு செய்வதால் பாதங்கள் மற்றும் விரலிடுக்கில் உள்ள அழுக்குகள் வெளியேறும். இதனால் பாதங்கள் மென்மையாகும்.