நரைமுடியை நிரந்தரமாக போக்க வேண்டுமா? இதை பயன்படுத்துங்கள்

Webdunia
புதன், 26 ஏப்ரல் 2017 (20:06 IST)
நரைமுடியை போக்கி தலைமுடியை கருமையாக்க இரசாயன ஹேர்டை பயன்படுத்தாமல் இந்த இயற்கை ஃப்ரூட் ஹேர்டையை பயன்படுத்துங்கள்.



 

 
நரைமுடியை மறைக்க பெரும்பாலானவர்கள் இராசயன ஹேர்டையை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் முடி உதிர்வு பாதிப்பு ஏற்படுகிறது. மேலும் நரைமுடி பிரச்சனை தீர்வதில்லை. நரைமுடியை நிரந்தரமாக இயற்கை முறையில் எளிதாக போக்கலம்.
 
இந்த ஃப்ரூட் ஹேர்டை பயன்படுத்தினால் நரைமுடி பிரச்சனை முழுவதுமாக போய்விடும். ஃப்ரூட் ஹேர்டை வீட்டிலே தயார் செய்யலாம். 
 
தேவையான பொருட்கள்:
 
பீட்ருட் சிறிய சைஸ்
 
காபி பவுடர் - 3 ஸ்பூன்
 
அரைத்த 10 செம்பருத்தி
 
எலுமிச்சை
 
ஃப்ரூட்டைத் துருவி, அதனுடன் காபி பவுடர், செம்பருத்தி பேஸ்ட் ஆகியவற்றை 200 மில்லி தண்ணீரில் சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அது 50 மில்லி அளவுக்கு சுண்ட வைக்க வேண்டும். சுண்டியதும் சிறிது நேரம் சூடு அடங்கும் வரை வைத்திருக்க வேண்டும்.
 
பின்னர் அதில் எலுமிச்சை ஜூஸ் சேர்த்து தலையில் தேய்த்து 30 நிமிடம் முதல் 1 மணி நேரம் வரை வைத்திருந்து பின் தலையை அலச வேண்டும். 
 
இதுபோன்று வாரம் ஒருமுறை செய்து வந்தால் கூடிய விரைவில் நரைமுடி கருமையாக மாறிவிடும்.
அடுத்த கட்டுரையில்