சோம்புவில் உள்ள மருத்துவ குணங்கள் !!

Webdunia
சுவாச பிரச்சனைகளுக்கு ஒரு சிறந்த சமையலறை மருந்தாக சோம்பு விளங்குகிறது. சோம்பு தண்ணீர் குடித்து வந்தால், மூளை சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்படும்.

பெருஞ்சீரகத்தை சிறிதளவு எடுத்துக்கொண்டு வெறும் வாயில் நன்றாக மென்று சாப்பிட்டு, ஒரு கிளாஸ் வெந்நீர் பருகி வந்தால், இந்த ஜலதோஷம் பிரச்சனை  உடனே சரியாகும்.
 
சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் அதிகளவு பெருஞ்சீரகத்தை சேர்த்துக்கொண்டால் இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுபாட்டுக்குள் வைக்க  முடியும்.
 
சிறிதளவு சோம்பை வெந்நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, அவற்றை மிதமான சூட்டில் ஒரு டம்ளர் அளவில் இந்த சோம்பு நீரை அருந்தினால், வயிற்றில் ஏற்படும் அனைத்து கோளாறுகளும் சரியாகும்.
 
சோம்பு தண்ணீர் உடலின் வளர்சிதை மாற்றத்தை சரிசெய்து, உடலில் உள்ள கலோரிகள் மற்றும் கொழுப்புகளைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்கும்.
 
சோம்பு தண்ணீர் ரத்தத்தில் உள்ள அதிகப்படியான யூரிக் ஆசிட்டுகளை வெளியேற்றி, ரத்தத்தைச் சுத்தப்படுத்தும்.
 
பெருஞ்சீரகத்தை நீர்கோர்ப்பு பிரச்சனை உள்ளவர்கள், அவ்வப்போது  சாப்பிட்டு வந்தால் உடலில் சேர்ந்திருக்கும் அதிகளவு நீரை, சிறுநீர் மூலமாக வெளியேற்றும் சக்தி கொண்டதாக பெருஞ்சீரகம் இருக்கிறது.  

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்