நமது உடலில் காணப்படும் தேவையற்ற அழுக்குகள் தான் நோயை ஏற்படுத்துகிறது. இந்த அழுக்குகளை வெளியேற்றிவிட்டால் நோய் ஏற்படுவதை தடுத்து விடலாம். இதற்கு அடிக்கடி எலுமிச்சை புல் டீ குடித்து வந்தால் நச்சுகள் வெளியேறி சுறுசுறுப்பாக மாறலாம். அத்துடன் சிறுநீரக பாதையையும் சுத்தமாக வைத்து கொள்ளும்.
பலரும் சந்திக்கும் முக்கியமான பிரச்னையில் ஒன்றாக முடி கொட்டும் பிரச்சினை உள்ளது. இதற்க்கு அடிக்கடி எலுமிச்சை டீ குடித்து வந்தாலே போதும். உங்களின் முடி உதிரும் பிரச்சினை குறைந்து விடும்.
அதுமட்டுமல்லாமல் முடி வளர்வதற்க்கு தேவையான வைட்டமின் எ மற்றும் வைட்டமின் பி சத்தும் கிடைக்கிறது.
பெண்களுக்கு ஏற்பட கூடிய பயங்கரமான வலியான மாதவிடாய் வலியை எளிதாக குணப்படுத்த கூடிய தன்மை எலுமிச்சை புல்லுக்கு உள்ளது. இது உடலுக்கு அதிக வலிமையையும் தரக்கூடியது. மேலும், ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவையும் இது சீராக வைத்து கொள்ளுமாம்.
எலுமிச்சை புல்லில் சில நோய் தொற்றுகளை தடுக்கும் திறன்கள் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன. உதாரணமாக எச்.ஐ.வி போன்ற போன்ற நோயினால் பாதிக்கப் பட்டவர்களிடமிருந்து பரவும் நோய் தொற்றுக்களை கட்டுப்படுத்துவதாக கூறப்படுகிறது .
எலுமிச்சை டீ தயாரிப்பு:
முதலில் எலுமிச்சை புல்லை நன்கு கழுவி பின்பு இதனை சிறிது சிறிதாக நறுக்கி கொள்ள வேண்டும். பின்பு நீரை கொதிக்க விட்டு அதில் இந்த புல்லை சேர்த்து பதினைந்து நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி கொள்ளுங்கள். ஆறிய பின்பு இதனை வடிகட்டி குடித்து வந்தால் நல்ல பலனை அடையலாம்.