தோல் நோய்களை போக்குவதில் முக்கிய பங்கு பெறும் கருஞ்சீரகம் !!

Webdunia
தோல் நோயை குறைப்பதில் கருஞ்சீரகம் முக்கிய பங்கு வகிக்கிறது. பசியைத்தூண்டவும் கருஞ்சீரகம் பயன்படுகிறது. ஜீரணத்தை சீர்படுத்தும். வயிற்றுப் போக்கை  குணப்படுத்தும். 

* கருஞ்சீரகம் புழுக்கொல்லியாக செயல்படும். வாந்தியைத் தடுக்கும். இதய வலியை குறைக்கும். சிறிதளவு கருஞ்சீரகத்தை பசும்பால் விட்டு அரைத்து முகத்தில் பூசி ஊறிய பின் கழுவி வர முகப்பரு மறையும். 
 
* கருஞ்சீரகத்தை நீர் விட்டு, அரைத்து, நல்லெண்ணையில் குழைத்து கரப்பான், சிரங்கு ஆகியவற்றில் பூசி வர குணம் தெரியும். கருஞ்சீரகத்தை தேன் விட்டு அரைத்து பிரசவித்த பின் ஏற்படும் வலிக்குப்பூசிட வலி மாறும். 
 
* கருஞ்சீரகத்தை அரைத்து தேமல் மேல் பூசி வர தேமல் சிறிது சிறிதாக மாறும். கருஞ்சீரகத்தை வறுத்து காடி விட்டு அரைத்து சொறி, தேமல் மேல் பூசி வர  தேமல், சொறி மறையும். 
 
* கருஞ்சீரகப்பொடி, மல்லிப்பொடி இரண்டையும் பாலில் கலந்து சாப்பிட அஜீரணம் மாறும். கருஞ்சீரகப்பொடியை தயிரில் கலந்து சாப்பிட அஜீரணம் மற்றும் வாயு  உற்பத்தி மாறும். 
 
* கருஞ்சீரகத்தை எருமைப்பால் விட்டு அரைத்து முகத்தில் தடவி வர முகப்பரு மாறும். கருஞ்சீரகத்தை வெற்றிலை சாறு விட்டு அரைத்து காது, கன்னப் பகுதியில்  ஏற்படும் வீக்கம் மேல் பற்று போட வீக்கம் மறையும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்