மழை மற்றும் குளிர்காலங்களில் ஏற்படும் ஜலதோஷ பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கற்பூரவல்லி !!

Webdunia
கற்பூரவல்லி மூலிகை சளிக்கு இருமலுக்கு இது ஒரு அற்புத மருந்தாக விளங்குகிறது. இதில் டீ வைத்து குடித்தால் சங்கடங்களை உருவாக்கும் தும்மலும் நின்றுவிடும்.

மழை மற்றும் குளிர்காலங்களில் வயது பேதமின்றி அனைவருக்கும் சளி, ஜலதோஷம் ஏற்பட்டு மூக்கடைப்பு, மூக்கில் நீர் ஒழுகுதல், தொண்டைக்கட்டு போன்றவை ஏற்படுகின்றது. 
 
கற்பூரவள்ளி செடிகளின் இலைகளை நன்றாக கசக்கி பிழிந்து, அந்த இலையின் சில துளிகளை மூக்கில் விட்டு உறிஞ்ச மூக்கடைப்பு மற்றும் சைனஸ் தொந்தரவுகள் நீங்கும். அந்த இலை சொட்டுகளை தொண்டையில் படுமாறு அருந்த தொண்டைக்கட்டு, வறட்டு இருமல், சளி தொந்தரவுகள் ஆகியவை நீங்கும்.
 
கற்பூரவல்லி தேநீர்: கற்பூரவல்லியின் இலைகளை நீக்கிவிட்டு தண்டுகளை மட்டும் சிறுசிறு துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவேண்டும். சிறுசிறு துண்டுகளாக நறுக்கிய தண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் விட்டு கொதிக்க வைக்க வேண்டும். பின் கொதிக்க வைத்த தண்ணீரை வடிகட்டி தேன் சேர்த்தால் கற்பூரவல்லி தேநீர் தயார்.
 
தினமும் உணவுக்கு முன்பு இந்த தேநீரை குடித்து வந்தால் தலைநீரேற்றம், தலைவலி சரியாகும். தலை நீரேற்றத்தின் போது தான் கடுமையான வலி, அடிக்கடி தும்மல், மூக்கில் அரிப்பு போன்றவை ஏற்படும். இப்பிரச்னைகளுக்கு கற்பூரவல்லி தேநீர் சிறந்த பலனை தருகிறது.
 
கற்பூரவல்லி இலைகளை தினமும் சாப்பிட்டு வந்தால், உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் வலிமையடைந்து நோய்களின் தாக்கம் குறையும்.
 
ஒரு கிராம் கற்பூரவல்லியில் ஆப்பிளை விட 42 மடங்கு ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளான வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் சி உள்ளது என சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
 
கற்பூரவல்லி இலைகளில் நார்ச்சத்து ஏராளமான அளவில் உள்ளது. இந்த இலைகளை தினமும் உட்கொண்டால் இரத்தத்தில் இருக்கும் கொலஸ்ட்ராலின் அளவு கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்