பாகற்காயை சாப்பிடுவதால் இத்தனை நன்மைகளை பெறமுடியுமா...?

Webdunia
செவ்வாய், 11 ஜனவரி 2022 (16:52 IST)
பாகற்காயை ஜுஸ் உடலின் ஆற்றலை மேம்படுத்தும். நீரழிவு நோயை எதிர்கொள்ள சிறந்த மருந்தாக பாகற்காய் சாறு பயன்படுகிறது.

சிறுநீரகம் மற்றும் சிறுநீர்ப்பை சிறப்பாக செயல்படுவதற்கு பாகற்காயானது உதவுகிறது. பாகற்காயை அடிக்கடி சமைத்து சாப்பிட்டு வர, உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் நீக்கபடுகிறது.
 
சிறு நீரகத்தில் உள்ள கற்களை கரைப்பதற்கும்  உதவுகின்றது. பாகற்காயானது உடலின் செரிமான மண்டலத்தை நன்றாக தூண்டுகிறது. இதனால் உணவு நன்றாக செரிமானம் ஆகின்றது.
 
கல்லீரலில் இருக்கக்கூடிய கிருமிகள் மற்றும் நச்சுக்கள் நீங்கி கல்லீரல் வீக்கம் குணமடைகிறது. பாகற்காய் ஆஸ்துமா, இருமல் போன்றவற்றை தீர்ப்பதில் மிகச் சிறந்த நிவாரணியாக இருக்கிறது.
 
பாகற்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலில் உள்ள பித்தம் குறையும். பாகற்காயை சாப்பிடுவதால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் கோளாறுகள் நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்