தினமும் முட்டையை உணவில் சேர்த்துக்கொள்வது நல்லதா....?

Webdunia
திங்கள், 24 ஜனவரி 2022 (14:50 IST)
முட்டையில் புரதசத்து அதிகம் உள்ளது. இது மனிதனிற்கு தேவைப்படும் சத்துகளிலில் மிகவும் முக்கியமான ஒன்றாகும். மேலும் முட்டையில் வைட்டமின் டி சத்து அதிகம் உள்ளது. இது நமது எலும்பிற்கும், பல்லிற்கும் மேலும் வலிமை சேர்க்க உதவுகிறது.


கண் சம்மந்தமான நோய்கள், கண் புரை போன்றவற்றை தடுக்க உதவுகிறது. மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் தினமும் காலையில் ஒரு முட்டை எடுத்துக்கொள்வது மேலும் பயனளிக்கும். எனவே எந்தவித தயக்கமும் இன்றி நாம் தினமும் முட்டையை உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

முட்டை தினமும் எடுத்துக்கொள்வது தவறு இல்லை. ஆனால் அதே அளவிற்கு உங்கள் உடல் உழைப்பும் இருந்தால் வேண்டும். முட்டை அதிகம் சாப்பிடுவது நீரிழிவு நோயின் தாக்கத்தை அதிகரிக்கிறது என கண்டறியப்பட்டால் உம் முட்டை மட்டுமல்ல பல விதமானஉணவுகள் நீரிழிவு நோயின் தாக்கத்தை அதிகரிக்கும் என்பதே உண்மை.

எல்லாவற்றையும் விட உங்கள் உடல் உழைப்பு குறைவாக இருந்தால் நீரிழிவு நோய் மட்டுமல்ல எல்லா விதமான நோய்களும் உடலில் ஒட்டிக்கொள்ளும். ஆகையால் தினமும் ஏதாவது ஒரு உடற்பயிற்சி அல்லது உடல் உழைப்பிற்கு ஏற்ற வேலைகளை செய்து உங்கள் உடலில் ஆரோக்கியமாக வைத்திருங்கள். அதுபோல, உங்கள் உணவிலும் ஒரு கண் வைத்திருங்கள்.

நல்ல ஆரோக்கியமான சத்துள்ள உணவை சரியான அளவில் எடுத்துக்கொண்டால் போதும், உடல் ஆரோக்கியம் எப்பொழுதும் சிறப்பாகவே இருக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்