நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நெல்லிக்காய் !!

Webdunia
நெல்லிக்காயில் வைட்டமின் சி, வைட்டமின் ஏ, மெக்னீசியம், கால்சியம், பாஸ்பரஸ், வைட்டமின் பி மற்றும் தாதுக்கள் அடங்கியுள்ளது. 

தினமும் ஒரு நெல்லிக்காய் சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். நெல்லிக்காயில் உள்ள குரோமியம் உடலில் தங்கியிருக்கும் LDL  கொலஸ்டிரால் என்னும் கெட்ட கொழுப்பை குறைக்கிறது. 
 
இரத்த சர்க்கரை அளவை குறைக்கவும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நெல்லிக்காய் உதவுகிறது. உடலுக்கு பல வகைகளில் பயன்களை கொடுக்கக் கூடியது நெல்லிக்காய். அந்த அளவிற்கு அதில் ஏராளமான சத்துக்கள் நிறைந்துள்ளன.
 
தினமும் ஒரு நெல்லிக்காய் அல்லது நெல்லிக்காய் சாறு குடித்து வந்தால் உடல் கொழுப்பு குறையும்.
 
நெல்லிக்காயில் உள்ள வைட்டமின் சி மற்றும் குரோமியம் இரத்தத்தில் உள்ள கொழுப்பை நீக்குவதால் இரத்த குழாய்களில் ஏற்படும் அடைப்பு நீங்கி இருதயதிற்கு செல்லும் ரத்த ஓட்டம் எளிதாகுகிறது.
 
அரை கப் நெல்லிக்காய் சாறு எடுத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் தேன் கலந்து காலையில் வெறும் வயிற்றில் குடித்து வந்தால் கொழுப்பை குறைத்து இதயத்தை ஆரோக்கியமாக வைத்து கொள்ள முடியும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்