பழங்களை உண்டால் அதிக நன்மை உண்டாகும். பழங்களில் அனைத்து சத்துகளும் உண்டு என்றாலும், எந்த பழங்களை உண்டல் எந்த வகையான சத்து கிடைக்கும் என்பது பலருக்கு தெரியாத ஒன்று. சில பழங்களை தேவையான காலங்களில் மட்டுமே உண்ண வேண்டும். மேலும் வைட்டமின், பாஸ்பரஸ், பொட்டாசியம் போன்ற சத்துக்கள் அதிக அளவில் பழங்களில் உள்ளது.
வாழைப்பழம் - வைட்டமின் B6, வைட்டமின் C நார்சத்து, பொட்டாசியம். நன்மைகள்: மலச்சிக்கல் போக்கும் உடலுக்கு சக்தி தரும்.
கொய்யாப்பழம் - வைட்டமின் C, வைட்டமின் ஆ போலேட். நன்மைகள்: மலச்சிக்கல் போக்கும். உடலுக்கு உற்சாகம் தரும்.
திராட்சை - வைட்டமின் K, வைட்டமின் B6, காப்பர். நன்மைகள்: மலச்சிக்கல் போக்கும். முடி அடர்த்தியாகும்.
அன்னாசி - வைட்டமின் C, வைட்டமின் B6, நார்சத்து. நன்மைகள்: சருமம் பொலிவடையும். இருதயத்திற்கு ஆரோக்கியம் தரும்.
மாதுளை - வைட்டமின் E, வைட்டமின் C, போலேட். நன்மைகள்: புற்றுநோயை தவிர்க்க உதவும் வயிற்றோட்டத்தை கட்டுப்படுத்தும்.
பலாப்பழம் - வைட்டமின் C, வைட்டமின் A, வைட்டமின் E. நன்மைகள்: இரத்த கொழுப்பை குறைக்கும். உடலுக்கு உற்சாகம் தரும்.
சப்போட்டா - வைட்டமின் E, வைட்டமின் C, இரும்புச்சத்து. நன்மைகல்: ஜீரணத்திற்கு மற்றும் உடல் எடை குறைக்க உதவும்.
மாம்பழம் - வைட்டமின் B6, வைட்டமின் C, வைட்டமின் K. நன்மைகள்: நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். ஜீரணத்திற்கு உதவும்.