இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க செய்யும் உணவுகள்...!!

Webdunia
தினசரி 3 பழங்களும் காய்ச்சிய பசும்பாலில் சேர்த்து இதனுடன் தேன் சேர்த்து கலந்து தினம் 1 வேளை பருகிவர, 2 மாதத்தில் உடல்பில்  இரத்தம் ஓட்டம் பெருகும்.
அத்திப்பழம் இரத்த விருத்திக்கு முழுப்பலன் அளிக்க வல்லது. ஹீமோகுளோபின் குறைவு காரணமாக உடல் வெளுத்து சுறுசுறுப்பின்றி சோர்வாக இருப்பவர்கள், தினசரி சீமை அத்திப்பழம் சாப்பிட்டு வருவது நல்லது.
 
தினமும் இலர்ந்த திராட்சையோ அல்லது பச்சை திராட்சையோ சாப்பிட்டு வர ரத்தம் தூய்மை பெறும். தினசரி 20 கிராம் பப்பாளிப் பழத்தைத் சாப்பிட்டு ஒரு டம்ளர் காய்ச்சிய பாலை குடித்து வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும்.
 
அரைக் கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைத்து பகல் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் புதிய இரத்தம் உற்பத்தியாகும். பொன்னாங்கன்னிக் கீரையைப் பொரியல் செய்து பகல் உணவுடன் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகி உடல்  பலம் பெறும்.
 
முருங்கைக் கீரையைக் மூன்று கைப்பிடி அளவு எடுத்து, ஒரு கைப்பிடியளவு துவரம் பருப்புடன் சேர்த்துச் சமைத்து இறக்கும் முன் ஒரு  கோழி முட்டையை உடைத்து விட்டுக் கிளறி, ஒரு தேக்கரண்டி அளவு நெய்யும் சேர்த்துத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில்  புதிய இரத்தம் உண்டாகும். உடல் வலிமையோடு இருக்கும்.
 
உடல் நலம், ஹீமோகுளோபின், இரத்தம் அதிகரிக்க, உணவுகள், இயற்கை மருத்துவம், மருத்துவ குறிப்புகள், Health, Hemoglobin,  Increase Blood, Foods, Natural Medicine, Medical Tips
 
Foods that increase hemoglobin levels in the body...!!

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்