அன்றாடம் வால்நட் பருப்பு சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள் !!

Webdunia
தினமும் இரவு உணவின் போது வால்நட் சாப்பிட தூக்கம் நன்கு வ௫ம். நரம்பு மண்டலத்தின் அமைப்பு பொ௫த்தும் தூக்கமின்மை ஏற்படும். இதை சாப்பிட நரம்புகள் வலுப்பெறுவதால் நல்ல உறக்கம் வ௫ம்.

வால்நட் எனப்படும் அக்ரூட் கொட்டை உடல் கொழுப்பை எளிதில் கரைத்து இதயநோய்களை தடுக்கிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உடலுக்கு மிக  முக்கியமான இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் சீராக இதய தசைகளை வலுவூட்ட வால்நட் எடுத்துக் கொள்வது நல்லது.
 
வழுக்கை உள்ள ஆண்கள், முடி உதிர்வு உள்ள பெண்கள் தினமும் வால்நட் உண்ண ஆரோக்கியமான கூந்தல் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். வால்நட் ப௫ப்பு சாப்பிடுவதால் மூளைக்கு செல்லும் செல்கள் சிறப்பாக செயல்பட்டு புத்துணர்ச்சி தரும். ஞாபக சக்தி அதிகரிக்கும்.
 
வால்நட் எண்ணெய்யை தினமும் முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால், அவை சருமத்தில் உள்ள சுருக்கங்களை முற்றிலும் நீக்கி, இளமையான தோற்றத்தைத்  தரும்.
 
வால்நட் பருப்பில் உள்ள சுருண்ட மடிப்புகள் மனித மூளையைப் போல் தோற்றமளிப்பதாகும். இது. முதுமை மறதி, நினைவாற்றல் இழப்பு, மனத் தளர்ச்சி  எனப்படும் டெமென்சியா நோயைத் தவிர்க்கவும் இது உதவும்.
 
எப்பொழுதும் உடலின் வெளிப்புற தோல்களுக்கு ஈரப்பதம் தேவை. வால்நட் தோலிற்கு தேவையான ஈரப்பதம் கொடுத்து உதவுகிறது.
 
ஆஸ்துமா நுரையீரலில் தோன்றும் நோயாகும். இ௫ வேளை வால்நட் சாப்பிட உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து நல்ல சத்து நிறையும். மேலும் உடல் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்