ஏராளமான மருத்துவ குணங்களை கொண்ட இலவங்கம்...!

Webdunia
இலவங்கத்தை இடித்து பொடி செய்து அரை கிராம் அளவு காலை, மாலை இருவேளை தேனில் குழைத்து சாப்பிட அக உறுப்புகள் அனைத்தும் பலம் ஏற்படும்.  இலவங்கப்பட்டை ஏராளமான மருத்துவ குணங்களைக் கொண்டது. பாட்டி வைத்தியமாக பட்டையை இருமலுக்கு தற்காலிக மருந்தாகத் தருகின்றனர்.
இது தசையை இறுக்கும் குணம், கபத்தை வெளியேற்றும் தன்மையால், தலைசுற்றல் மற்றும் வாந்தியைத் தடுக்கும் மருந்துப் பொருளாக ஆதிகாலத்திலிருந்தே மக்கள் லவங்கத்தைப் பயன்படுத்தி வந்திருக்கின்றனர்.
 
இலவங்கப்பொடியை 2 கிராம் அளவு எடுத்து பனைவெல்லத்தில் கலந்து சாப்பிட மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உதிரச் சிக்கலும் அதனால் ஏற்படும் வலியையும் குணப்படுத்தும்.
 
இலவங்கப்பூ பொடியை பற்பொடியுடன் சிறிதளவு சேர்த்து பல்தேய்த்து வர வாய்நாற்றம், பல்வலி, ஈறுவீக்கம் முதலியவை குணமாகும். இவை ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. இரத்தத்தில் உள்ள கொழுப்பை நீக்குகிறது.
 
பட்டையிலுள்ள கால்சியம் நமது இதயத்தை நன்கு சீராக வைக்க உதவுகிறது. நரம்புத் தளர்ச்சியைக் கட்டுப் படுத்துகிறது. பட்டையும் தேனும் கலந்து சாப்பிட்டால், இது தற்காப்புத் தன்மையை அதிகரிக்குமாம். ஆயுளைக் கூட்டுமாம். உடல் சோர்வை விரட்டுமாம்.
பட்டை பூஞ்சை காளான், பாக்டீரியா, வைரஸ், ஒட்டுண்ணி நோய்களிலிருந்து நமைக் காப்பாற்றுகிறது. தலைப் பேனை விரட்டவும் பட்டை உதவுகிறது. பூச்சிக்  கடிக்கு பட்டையை அரைத்துப் பூசலாம். சிறுநீர் உபாதை, சிறுநீர்க் குழாயில் பாக்டீரியா தொற்று போன்றவற்றிலிருந்து நம்மைக் காக்கிறது.
 
பரு வந்தாலும், பட்டையை அரைத்துப் பூசினால் பரு போயேவிடும். பட்டை மற்றும் தேன் கலந்து தினம் காலையில் சாப்பிட்டால் காது கேளாமை சரியாகும். தலைவலிக்கும் பட்டையை அரைத்து தடவலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்