ஜீரோ வட்டியில் கடன்: ஆந்திர முதல்வரின் அசத்தல் திட்டம்

Webdunia
வெள்ளி, 24 ஏப்ரல் 2020 (19:07 IST)
கொரோன வைரஸ் காரணமாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து நாடு முழுவதும் உள்ள ஏழை எளிய மக்கள் வேலையின்றி வருமானமின்றி பசியிலும் பட்டினியிலும் வாடி வருகின்றனர் என்பது தெரிந்ததே
 
இந்த நிலையில் அனைத்து மாநில அரசுகளும் மத்திய அரசும் ஏழைகளின் பசியைப் போக்க உதவி செய்து வருகின்றது என்பதும் குறிப்பாக தமிழகத்தில் அம்மா உணவகம் இலவசமாக உணவு வழங்கி வருகிறது என்பதும் தெரிந்ததே
 
இந்த நிலையில் ஆந்திர மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அவர்கள் வட்டியில்லா கடன் குறித்த அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். பெண்கள் சுய வேலை வாய்ப்பு குழுக்கள் மூலம் 1,500 கோடி வங்கியிலிருந்து கடன் பெற்று தர அவர் முயற்சித்து முயற்சித்து வருகிறார் என்றும், இதனை அடுத்து 8.78 லட்சம் சுய உதவி குழுக்கள் பயன் பெறுவார்கள் என்றும் குறிப்பாக 96 லட்சம் பெண்களுக்கு இந்த வட்டியில்லா கடனுதவி கிடைக்கும் என்றும் முதல்வர் அலுவலகத்திலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளது
 
முதல்வரின் இந்த அதிரடி திட்டத்தினால் ஆந்திர மாநில ஏழை எளிய மக்கள் மகிழ்ச்சியில் அடைந்து முதல்வர் ஜெகந்நாதன் ரெட்டி அவர்களுக்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்