மும்பையில் வசித்துவருபவர் ராதிகா பரேக். இவர் அங்குள்ள ஒரு நிருவனத்தில் முதலீட்டு ஆலோசகராகப் பணியாற்றிவருகிறார். இந்நிலையில் தனது ஸ்மார்ட் போனில் , பீர் வாங்குவதற்காக கூகுளில் தேடி ஒரு மொபைல் எண்ணைக் கண்டுபிடித்துள்ளார்.
அதைக் கேட்டு ராதிகா தனது கூகுள் பேயில் அந்த பணத்தை செலுத்துதாகக் கூறீயுள்ளார். பின்னர் UPI எண்ணைத் தருமாறு அந்த ஊழியர் ராதிகாவும் அந்த எண்ணைக் கொடுத்துள்ளார். ஆனால் ராதிகாவின் அக்கவுண்டில் இருந்து 420 ரூபாய் எடுப்பதற்கு பதிலாக, 29, 001 ரூபாயை எடுத்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த ராதிகா இதுகுறித்து கேட்டபோது அவர் இந்தத்தொகை திரும்ப வந்துவிடும் எனக் கூறியுள்ளார்.
அதன்பின்னர் ரூ. 58, 000 யை எடுக்கப்பட்டுள்ளதாக அவரது மொபைலுக்கு குறுஞ்செய்து வந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். மொத்தம் 87 ஆயிரம் ரூபாய் எடுக்கப்பட்டதால் பின்னர் அந்த முகவரி உள்ள கடைக்கு சென்று இதுகுறித்து கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் இது தங்கள் எண் இல்லை என கூறிவிட்டனர். இந்நிலையில் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராதிகா போலீஸில் புகார் செய்து மோசடி வழக்கு பதிந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.