எந்த மதம்...? பதில் சொல்லாத மாணவனுக்கு பள்ளியில் சேர்க்கை மறுப்பு !

Webdunia
சனி, 22 பிப்ரவரி 2020 (19:05 IST)
எந்த மதம்...? பதில் சொல்லாத மாணவனுக்கு பள்ளியில் சேர்க்கை மறுப்பு !

கேரளாவில் உள்ள பள்ளி ஒன்றில் மதத்தை குறிப்பிடாத மாணவனை 1 ஆம் வகுப்பில் சேர்க்க மருத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் வசித்து வருபவர்  நசீம். இவரது மனைவி தன்யா.  இந்த தம்பதியர் தங்கள் மகனை 1 ஆம் வகுப்பில் சேர்க்க முடிவு செய்து, அங்குள்ள அரசு உதவி பெறும் மேல்நிலைப் பள்ளிக்கு சென்ற நசீம் தனது மகனை அந்தப் பள்ளியில்  சேர்க்க விண்ணப்பம் பெற்றார்.
 
அந்த விண்ணப்பத்தை அவர் நிரப்பிக் கொண்டிருந்தபோது, மதம் என்று குறிப்பிடும் இடத்தில், மதம் இல்லை எனக் குறிப்பிட்டிருந்தார். 
 
அதைப் பார்த்த தலைமையாசிரியர், மதம் இல்லாவிட்டால் மகனை பள்ளியில் சேர்க்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
 
அதேசமயம் நசீர் மதம் பற்றிக் குறிப்பிட முடியாது என்பதில் உறுதியாக இருந்துள்ளார். அப்போது பள்ளியும் அவரது மகனை சேர்க்க முடியாது என தெரிவித்துள்ளனர்.
 
ஏற்கனவே கேரள அரசு பள்ளியில் சேர்க்கும்போது மதத்தை தெரிவிக்க தேவையில்லை என  உத்தரவிட்டுள்ள நிலையில், கேரள அரசின் உத்தரவை மீறும் வகையில் பள்ளி செயல்பட்டதாக பெரும் சர்ச்சை எழுந்துள்ளது.
 
இதனையடுத்து கேரள கல்வி அமைச்சர், இதுகுறித்து விசாரணை நடத்தும்படி உத்தரவிட்டது. அதன்பின் நசீமின் மகனை பள்ளியில் சேர்ப்பதாக அறிவித்தது. ஆனால் நசீன்  தன் மகனை வேறு பள்ளியில் சேர்ப்பதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்