மருத்துவ குணம் உள்ளதாம்! 36 லட்சத்துக்கு விற்பனையான 7 அடி நீள மீன்!

Webdunia
செவ்வாய், 26 அக்டோபர் 2021 (17:33 IST)
மேற்கு வங்கத்தில் நதியில் பிடிபட்ட 7 அடி நீளமுள்ள ராட்சத மீன் 36 லட்சத்திற்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேற்கு வங்கத்தில் உள்ள சுந்தர்பன் நதியில் மீனவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்துள்ளனர். அப்போது மீனவர் ஒருவருக்கு 7 அடி நீளமுள்ள ராட்சத மீன் ஒன்று சிக்கியுள்ளது. டெலியோ போலா எனப்படும் இந்த மீன் மருந்துகள் தயாரிக்க அதிகளவில் பயன்படும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்த மீனை ரூ.36 லட்சத்துக்கு மீனவர்கள் விற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த மீனின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்