தென்மேற்கு பருவமழை காரணமாக கடந்த சில வாரங்களாக கேரளாவில் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. கடந்த 3 நாட்களாக கேரளாவில் புரட்டிப் போட்ட கனமழையால் நிலச்சரிவு, வெள்ளம் ஏற்பட்டது. ஆசியாவின் உயரமான அணையாக கருதப்படும் இடுக்கி அணையில் நீர் மட்டும் 2,403 அடியை எட்டியிருக்கிறது.
இந்நிலையில் கேரள மாநிலம் இடுக்கி அணையில் இருந்து 4 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இடுக்கி அணை வேகமாக நிரம்பும் நிலையில் உள்ளதால் முதற்கட்டமாக வினாடிக்கு 30,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.