குஜராத் அரசியலில் திடீர் திருப்பமாக, அம்மாநில நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் விஜய் ரூபானி, அம்மாநிலத்தின் முதல் அமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
குஜராத்தின் முதலமைச்சராக பதவி வகித்து வந்த ஆனந்தி பெண் பட்டேல் தனது பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்தார். தனக்கு 75 வயது ஆகிவிட்டதால், அரசியலில் ஈடுபட முடியவில்லை என்று அவர் கூறியிருந்தார். இதையடுத்து குஜராத்தின் அடுத்த முதலமைச்சராக யார் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
குஜராத் மாநில பா.ஜ.க. தலைவர் விஜய் ரூபானி, மூத்த தலைவர்கள் நிதின் பட்டேல் மற்றும் பூபேந்திரசிங் சுதசமா ஆகியோர் முதல்வருக்கான போட்டியில் இருந்தனர். குறிப்பாக நிதின் பட்டேலை முதல்வராக தேர்ந்தெடுக்க பிரதமர் மோடி விரும்பியதாக ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டனர்.
ஆனால் திடீர் திருப்பமாக, ராஜ்கோட் பகுதியில் எம்.எல்.ஏவாக வெற்றி பெற்று, தற்போது மாநில நீர்வளத்துறை அமைச்சராக பதவி வகித்து வரும் விஜய் ரூபானி முதலமைச்சாராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நிதின் பட்டேல் துணை முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.