கைது செய்யப்பட்ட பாஜக எம் எல் ஏ வானதி சீனிவாசன்!

Webdunia
சனி, 8 மே 2021 (08:16 IST)
மேற்கு வங்கத்தில் திருணாமூல் காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்ட தமிழக பாஜக எம் எல் ஏ வானதி சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

மேற்கு வங்க சட்டமன்ற தேர்தலில் ஆளும் திரிணாமூல் காங்கிரஸ் – பாஜக இடையே கடும் போட்டி நிலவிய நிலையில் திரிணாமூல் காங்கிரஸ் வெற்றியடைந்து ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் திரிணாமூல் காங்கிரஸை சேர்ந்தவர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே மோதல் வெடித்து கலவரமாக மாறியது.  இதில் 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில் பாஜகவினர் மேற்கு வங்கத்தில் திருணாமூல் காங்கிரஸுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் கடந்த இரண்டு நாட்களாக ஈடுபட்டு வருகின்றனர். அதில் கலந்துகொண்ட தமிழக பாஜக எம் எல் ஏவும், தேசிய மகளிர் அணி செயலாளருமான வானதி சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்